Condolence for the demise of Dr. Antonysamy

With 0 Comments,

CATCA குடும்பத்தின் முன்னோடிகளில் ஒருவரும்,  வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர். அந்தோணிசாமி அவர்கள் அக்டோபர் மாதம் 4-ம் நாள் 2016 அன்று இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

drantonysamy

முனைவர் அந்தோணிசாமி அவர்கள் இறை பக்தர்; சிறந்த தமிழ் கவிஞர். பேச்சிலும் மூச்சிலும் எழுத்திலும் கவிதை தரக்கூடியவர். தன் கவிதையால் கடவுளைப் பாடித் துதித்தவர்.  தமிழ்த் திருப்பலிகளில் தவறாது கலந்துகொள்வது மட்டுமன்றி, கிறிஸ்துமஸ் மற்றும் சிறப்புத் திருப்பலிகளில் வாழ்த்துரைகளும், கவிதைகளும் வழங்கியவர். வாசிங்டன் வட்டாரத்தில் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் வானொலி நிகழ்ச்சிகளை விடாப்பிடியாய் நடத்தி, தன் கணீர்க் குரலைக் காற்றினில் கலக்கச் செய்தவர். அன்னார் தமிழுக்கும், தமிழ்க் கிறிஸ்தவர்களுக்கும் செய்திட்ட பெரும்பணிகளை பெருமையுடன் நினைவுகூரும் அதே வேளையில், ஒரு மிகச் சிறந்த மனிதரின் இழப்பால் CATCA மிக்கத் துயர் கொள்கிறது. அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்.

The wake for Dr.Antonysamy has been planned on Friday, Oct. 14th, 2016 between 4.00pm and 8.00pm at:

Hines-Rinaldi Funeral Home
11800 New Hampshire Ave,
Silver Spring, MD 20904

Our Spiritual Director Fr. Antony Dhas will lead the prayer service. We request the CATCA members to attend this service and pay the final respect to our beloved Dr. Anthonysamy. May his soul rest in peace.